திருவண்ணாமலை: தந்தை-மகள் உயிரிழப்பு..!காரணம் என்ன...? போலீசார் விசாரணை...


திருவண்ணாமலை: தந்தை-மகள் உயிரிழப்பு..!காரணம் என்ன...? போலீசார் விசாரணை...
x
தினத்தந்தி 11 March 2022 12:09 PM IST (Updated: 11 March 2022 12:09 PM IST)
t-max-icont-min-icon

தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்செட்டிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சிவபாலன் (வயது 40).  இவர் சே‌.கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரம்பா.  இந்த தம்பதிகளுக்க ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். 

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மகள் தேவிப்பிரியா (17) வீட்டில் மயங்கி நிலையில் கிடந்து உள்ளார். அவரை மீட்டு பெற்றோர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மகள் உயிரிழந்த தூக்கத்தில் சிவபாலனும் மனைவி ரம்பாவும் இருந்து உள்ளனர். 

இந்தநிலையில் தந்தை சிவபாலன் இன்று காலை மணலூர்பேட்டை செல்லும்  சாலையில் உள்ள காட்டு பகுதியில் கை மற்றும் கால் முகங்களில் காயங்களுடன்  உயிரிழந்து கிடந்துள்ளார். 

இது குறித்து அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த சிவபாலன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தந்தை மகளும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story