ஊதிய உயர்வை வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு
ஊதிய உயர்வை வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் போராட்ட அறிவிப்பு
புதுச்சேரி
பாண்டிச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க தலைவர் வாணிதாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் மொத்தம் 72 ஊழியர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் ஆஷா மற்றும் என்.எச்.எம். ஊழியர்களுக்கு மட்டும் தொகுப்பூதியத்தை அரசு உயர்த்தி அறிவித்தது. ஆனால் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
இது எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கக்கோரி வருகிற 16-ந் தேதி புதுச்சேரி சுகாதாரத்துறை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story