சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்...!


சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் தயாளு அம்மாள்...!
x
தினத்தந்தி 11 March 2022 10:57 PM IST (Updated: 11 March 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தயாளு அம்மாள் இன்று மாலை வீடு திரும்பினார்.

சென்னை,

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் கடந்த சில ஆண்டுகளாகவே வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அவருக்கு வயது 89. 

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வசித்து வரும் அவருக்கு நேற்று உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, ஆயிரம் விலக்கு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும், முதல்வர் மு.க. ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது தாயாரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இந்நிலையில், தயாளு அம்மாள் உடல் நலம் பெற்று இன்று மாலை 4.30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பினார். தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story