கள்ளநோட்டு கும்பலை பிடிக்க சென்னையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை


கள்ளநோட்டு கும்பலை பிடிக்க சென்னையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 11 March 2022 11:56 PM IST (Updated: 11 March 2022 11:56 PM IST)
t-max-icont-min-icon

கள்ளநோட்டு கும்பலை பிடிக்க சென்னையில் தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை

புதுச்சேரி
புதுச்சேரியில் 500 ரூபாய் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக  சாரம் மனோஜ்குமார் (வயது 29), பிள்ளைத்தோட்டம் ஜெயபால் (21), அரும்பார்த்தபுரம் சரண், புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன்கமல் (31), சென்னை எர்ணாவூரை சேர்ந்த பிரதீப்குமார் (35) ஆகியோரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் கள்ள நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய பிரதீப்குமாரின் கூட்டாளியான ரகு மற்றும் சிலரை பிடிக்க தனிப்படை போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். மேலும் புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகன் கமல், பிரதீப்குமார் ஆகியோரை பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Next Story