கிலோ ரூ.2-க்கு கூட விற்க முடியாததால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி


கிலோ ரூ.2-க்கு கூட விற்க முடியாததால் சாலையோரம் கொட்டப்படும் தக்காளி
x
தினத்தந்தி 12 March 2022 1:20 AM IST (Updated: 12 March 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

தக்காளி விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிலோ ரூ.2-க்கு கூட விற்க முடியாததால் தக்காளியை சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி விலை குறைந்து வந்தது. அதன்படி, வரத்து அதிகரிப்பால் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த மாதம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து இல்லாததால் 14 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.1,000 முதல் ரூ.1,500 வரை விற்பனையானது. இதனால் தக்காளி கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில வாரங்களாக தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு தினசரி 100 டன் தக்காளி வரத்து உள்ளது. இதனால் அவற்றின் விலை கடுமையாக குறைந்துள்ளது. அதன்படி, 14 கிலோ எடை கொண்ட தக்காளி பெட்டி ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனையாகிறது.

தற்போது கிலோ ரூ.2-க்கு கூட விற்க முடியாததால் வேதனை அடைந்த விவசாயிகள், வியாபாரிகள் தக்காளிகளை விற்க முடியாமல் சாலையோரம் கொட்டி செல்கின்றனர்.

குறிப்பாக ஒட்டன்சத்திரத்தில் நேற்று சில இடங்களில் தக்காளிகள் சாலையோரம் கொட்டப்பட்டு கிடந்தன.

Next Story