இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு மதுரைக்கு மாற்றம்
இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரிய வழக்கு மதுரைக்கு மாற்றம் ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அமைப்பின் தேசிய துணைத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தாக்கல் செய்துள்ள மனுவில், ‘1974-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தில், கச்சத்தீவுக்கு புனிதப் பயணம் செல்லும் பக்தர்களை எந்தவித போக்குவரத்து ஆவணங்களும் இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தப் பிரிவுகளை அமல்படுத்தவும், இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 68 மீனவர்களையும், 21 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும் மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, கச்சத்தீவு ஒப்பந்தத்தின் இந்தப் பிரிவுகள் முறையாக அமல்படுத்தப்படாததால், இந்திய மீனவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், ‘மீனவர்கள் எல்லை தாண்ட எந்த உரிமையும் இல்லை. பிறநாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய அரசு அவர்களை கைது செய்கிறது’ என்று கருத்து தெரிவித்தனர். பின்னர், ‘இதே கோரிக்கையுடன் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.

Related Tags :
Next Story