4 பேரை கொன்ற டி 23 புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 March 2022 7:44 AM IST (Updated: 12 March 2022 7:44 AM IST)
t-max-icont-min-icon

முதுமலை புலிகள் காப்பக பகுதியில் 4 பேரை கொன்ற டி23 புலியை பிடிக்க 11.34 லட்சம் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நீலகிரி மாவட்டம், கூடலூர் மற்றும் மசினகுடி பகுதிகளில் உள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கடந்த ஆண்டு ஆட்கொல்லி புலி 4 பேரை கொன்றது. இதையடுத்து 24 செப்டம்பர் 2022 முதல் 15 அக்டோபர் 2022 வரையில் கடுமையான தேடுதலுக்கு பின்னர் வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர். 

கிட்டத்தட்ட 23 நாட்களுக்கும் மேலாக நான்கிற்கும் மேற்பட்ட வனக் கால்நடை மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள், 3 மோப்ப நாய்கள் மற்றும் இரண்டு கும்கி யானைகள் உதவியுடன் டி 23 புலி, மயக்க ஊசி செலுத்தி உயிருடன் பிடிக்கப்பட்டது. 

பின்னர் சிகிச்சைக்காக கர்நாடகாவில் உள்ள  மைசூரு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில் டி 23 புலியைப் பிடிக்க ரூ.11,34,000 செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

புலியை பிடிக்க இரும்பு குண்டு வைத்தல், வாகன வாடகை, மருந்துகள், உபகரணங்கள் வாங்கியது தொடர்பான செலவுகள் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், உதகை, கூடலூர், மசினகுடி வன ஊழியர்கள், மருத்துவ குழுவினர், தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஆகியோர்களுக்கான உணவு, தண்ணீர் மற்றும் தேநீர் உள்ளிட்ட செலவுகள் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story