உலக செவித்திறன் நாளையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்
உலக செவித்திறன் நாளையொட்டி புதுவையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
புதுச்சேரி
உலக செவித்திறன் நாளையொட்டி புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள காது, மூக்கு, தொண்டை பிரிவு சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பாரதி பூங்கா அருகே தொடங்கிய ஊர்வலத்தை சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு தொடங்கிவைத்தார்.
இந்த ஊர்வலம் நகரப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பாரதி பூங்காவை வந்தடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேல் மற்றும் அதிகாரிகள், செவிலிய மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
Related Tags :
Next Story