புதுவையில் 24 மணி நேர வரி செலுத்துவோர் சேவை மையம்


புதுவையில்  24 மணி நேர வரி செலுத்துவோர் சேவை மையம்
x
தினத்தந்தி 12 March 2022 10:04 PM IST (Updated: 12 March 2022 10:04 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 24 மணி நேர வரி செலுத்துவோர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி
புதுச்சேரி ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரி இணை ஆணையர் சதீஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் வரும் ஜி.எஸ்.டி, மத்திய கலால் தமிழ்நாடு, புதுச்சேரி மண்டலத்தின் தலைமை ஆணையர் வரி செலுத்துவோர் குரல் மூலம் சேவா கேந்திரா, வர்த்தக வசதி மையத்தை தொடர்பு கொள்வதற்காக வரி செலுத்துவோர் சேவை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி 9445848686 என்ற எண்ணை வரிசெலுத்துவோர் தொடர்பு கொண்டு தங்களின் கேள்விகள், சந்தேகங்களை தெரிவிக்கலாம். இது சென்னை ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரியின் தலைமை ஆணையரிடம் இருந்து அந்தந்த ஆணையர்களுக்கு அனுப்பப்படும். புதுவை எல்லைக்குட்பட்ட அனைத்து வரி செலுத்துவோர் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story