“நடப்பாண்டில் ரூ.12,700 கோடி வருவாய் வசூல்” - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி


“நடப்பாண்டில் ரூ.12,700 கோடி வருவாய் வசூல்” - வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி
x
தினத்தந்தி 12 March 2022 11:32 PM IST (Updated: 12 March 2022 11:32 PM IST)
t-max-icont-min-icon

பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

“தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் ரூபாய் 12,700 கோடி அரசுக்கு நிதிவருவாய் கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் அரசுக்கு செலுத்த வேண்டிய பதிவுக்கட்டணம் அனைத்தும் இணையவழி நடைமுறைகள் மூலமாக செலுத்தும் பின்பற்றப்பட்டு வருகிறது.

முழுமையாக மேலும், சார்பதிவாளர்கள் அரசால் அனைவரும் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின் படி பத்திரப்பதிவு மேற்கொள்ளவும் மற்றும் வழிகாட்டி மதிப்பீட்டினை குறைத்தோ அல்லது அதிகப்படுத்தியோ பத்திரப்பதிவு மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. போல் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் பொதுமக்களும் அரசால் நிர்ணயக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பீட்டின்படி பதிவு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

மேலும் மதிப்பீட்டினை குறைத்து பதிவு வழிகாட்டி செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு இழப்பு வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பத்திரப்பதிவு மேற்கொள்ளும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் எந்த அலுவலர்களுக்கோ அல்லது இடைத்தரகர்களுக்கோ கையூட்டு எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும், அவ்வாறு கையூட்டு கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறை தலைவர், அரசு கட்டுபாட்டு அறைக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story