ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்..!


ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பம் இன்று முதல் தொடக்கம்..!
x
தினத்தந்தி 14 March 2022 10:08 AM IST (Updated: 14 March 2022 10:08 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பம் இன்று முதல் தொடங்கயது..!

சென்னை,

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த் 7ம் தேதி வெளியிட்டது. அதன் படி இன்று முதல் (மார்ச் 14) முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை இத்தேர்விற்க்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 

இத்தேர்விற்க்கான தகுதிகள்

தாள் 1 : அரசு  அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

தாள் 2 :
அரசு  அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள், முதுநிலைப் பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர். அதிகப்பட்ச வயது வரம்பு கிடையாது.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர், எம்பிசி மற்றும் பிசி பிரிவினருக்கு ரூ. 500 கட்டணமும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 250 கட்டணமும் செலுத்த வேண்டும்.

இதன்படி தகுதியானவர்கள் இன்று முதல்  http://trb.tn.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்றும், தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. 


Next Story