சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை- பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்
சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர்.
சென்னை,
சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டிடத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த ஆணையரக அலுவலகத்தில் இணை ஆணையரக மற்றும் துணை ஆணையரக அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
இதில் துணை ஆணையர் நடராஜன் என்பவரின் அலுவகத்தில் தான் சோதனை நடைபெற்று வருகிறது. பல லட்சம் ரூபாய் கையெழுத்து பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
லஞ்ச ஒழிப்பு போலீசாரின் டி.எஸ்.பி சின்ராஸ் என்பவரின் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related Tags :
Next Story