கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சகோபுர வீதியுலா
காரைக்காலில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி சகோபுர வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது.
காரைக்காலில் பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் ஒவ்வொரு நாளும் காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சமூர்த்திகளின் (கைலாசநாதர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சுந்தராம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர்) சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரம்) நேற்று இரவு சிறப்பாக நடந்தது.
விழாவில் கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் 17-ந் தேதி தேரோட்டமும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் அறங் காவல் குழுவினர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story