சர்வதேச மகளிர் தின விழா
அரியூர் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
அரியூர் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ராமச்சந்திர கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர் வித்யா தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் பிரதீப் தேவநேயன் வரவேற்றார். டீன் ஜெயராமன் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட இளைஞர் மேம்பாட்டு அதிகாரி ஹெலன்ராணி, பிட் வெல்த் நிறுவனரும், உளவியல் நிபுணருமான ஆர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர்.
விழாவையொட்டி கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும் கல்லூரி மாணவிகள், பேராசிரியைகளுக்கு மெஹந்தி, கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை உதவி பேராசிரியர் மேகநாதன் செய்திருந்தார்.
Related Tags :
Next Story