அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
கணுவாப்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
வில்லியனூர் அருகே உள்ள கணுவாப்பேட்டை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மயானக்கொள்ளை திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை மயான கொள்ளை நடந்தது. அம்மன், காளி அவதாரம் எடுத்து ரணகளிப்பு எனப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன், என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மோகன், சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story