மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்!!


மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தேரோட்டம்; திரளான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்!!
x
தினத்தந்தி 15 March 2022 9:36 AM IST (Updated: 15 March 2022 9:36 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை,

சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருந்திருவிழா தேரோட்டம் திரளான பக்தர்களுடன் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று  கோலாகலமாக நடைபெற்று வருகிறது.முக்கிய வீதிகளின் வழியாக  பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். சரண கோஷம் முழங்க பக்தர்கள் தேரை நான்கு மாட வீதிகளில் இழுத்து சென்றனர்.

அங்கு பக்தர்களுக்கு தேவையான வசதிகள் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story