ஈரோடு: நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த பசுமாடு உயிர் பிரிந்தது..!


ஈரோடு: நாட்டு வெடிகுண்டு வெடித்து வாய் சிதைந்த பசுமாடு உயிர் பிரிந்தது..!
x
தினத்தந்தி 15 March 2022 10:15 AM IST (Updated: 15 March 2022 10:17 AM IST)
t-max-icont-min-icon

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வாய் சிதைந்து ஐந்து நாட்களாக உயிருக்கு போராடி வந்த பசுமாடு இன்று பரிதாபமாக உயிரிழந்தது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே பங்களாப்புதூர் புஞ்சை துறையம்பாளையம் பகுதியில் வசிப்பவர் மதன்குமார். இவர் வளர்த்து வந்த பசுமாடு கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் மேய்ச்சலுக்கு விடப்பட்டது. அப்போது சமூக விரோதிகளால் வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டை தவறுதலாக கடித்ததில் வாய் சிதைந்த நிலையில் ஐந்து நாட்களாக உயிருக்கு போராடி வந்தது.

நேற்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக மதன்குமார் கொண்டு சென்றனர். பசுமாட்டை பரிசோதித்த மருத்துவர்கள் தாடை எலும்பு மற்றும் நாக்கு பகுதி முற்றிலும் சிதைந்துள்ளதால் பசுமாட்டை குணப்படுத்தி இயல்பு நிலைக்கு கொண்டு வர இயலாது என கூறி சில மருந்துகள் கொடுத்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் அந்த பசுமாட்டின் உயிர் பிரிந்தது. இச்சம்பவம் குறித்து பங்களாப்புதூர் போலீசார் மற்றும் கால்நடை மருத்துவர்களுக்கு பசுமாட்டின் உரிமையாளர் மதன்குமார் தகவல் கொடுத்தார். இதைத்தொடர்ந்து பசுமாட்டின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அங்கேயே நல்லடக்கம் செய்யப்படுவதாக மதன்குமார் தெரிவித்தார்.

வாய்சிதைந்த தனது பசுமாட்டை காப்பாற்ற மதன்குமார் பல மருத்துவ முயற்சிகள் எடுத்தும் பலனளிக்காமல் பசுமாடு உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியின் விவசாயிகள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாய் பசு உயிரிழந்த வேதனையில் தவிக்கும் இளங்கன்று குட்டி

Next Story