முன்னாள் எம் எல் ஏ வீட்டில் 60 பவுன் நகை திருட்டு டிரைவர் மீது வழக்கு
முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 60 பவுன் நகை திருடு போனதாக டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி
முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் 60 பவுன் நகை திருடு போனதாக டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் எம்.எல்.ஏ.
புதுவை ஏனாம் வெங்கடாசலம் பிள்ளை வீதியை சேர்ந்தவர் தனகாந்தராஜ். இவர் ராஜ்பவன் தொகுதியில் கடந்த 1974-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இவர் இறந்துவிட்ட நிலையில், இவரது மனைவி பார்வதி (வயது 75) தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு உதவியாக டிரைவர் எட்வர்டு (40) என்பவர் இருந்து வந்தார். இதனால் வீடு பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை டிரைவர் எட்வர்டு கவனித்து வந்தார்.
60 பவுன் நகைகள்
இந்தநிலையில் பார்வதி கீழே விழுந்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது அவரது நகைகள் அனைத்தும் வீட்டில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
பார்வதி சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டில் இருந்த தங்கம், வெள்ளி, வைரம் என 60 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. மேலும் எட்வர்டின் நடவடிக்கைகளால் அவரே நகையை திருடி இருக்கலாம் என்று பார்வதிக்கு சந்தேகம் எழுந்தது.
இதுதொடர்பாக பார்வதி ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் எட்வர்டு மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story