மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு  தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 March 2022 9:29 PM IST (Updated: 15 March 2022 9:29 PM IST)
t-max-icont-min-icon

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

புதுச்சேரி
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கர்நாடக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டப்பட்டால் கடைமடை பகுதியான காரைக்கால் பாலைவனமாகிவிடும் என்று புதுவை அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் கர்நாடக அரசை கண்டித்து புதுவை தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அவர்கள் கர்நாடக அரசுக்கு எதிராகவும், புதுவை அரசு சட்டமன்றத்தை கூட்டி அணை கட்டுவதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என்றும் கோஷங்களை எழுப்பினர்.

Next Story