நூறு நாள் வேலைக்கு சென்று மாயமான பெண் கொடூரக்கொலை; நிர்வாண நிலையில் உடல் வீச்சு
நூறு நாள் வேலைக்கு சென்று மாயமான பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். நிர்வாண நிலையில் உடல் வீசப்பட்டதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்த சுமார் 50 வயதுடைய பெண் ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் திட்டத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்த அவர் திடீரென மாயமானார். இதுபற்றி அவருடைய கணவர் பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் ஊருக்கு அருகே காட்டுப்பகுதியில் அந்த பெண் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்தார்.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
காட்டுப்பகுதிக்கு இழுத்து சென்ற கும்பல்
போலீஸ் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகின. மாயமான பெண் 100 நாள் வேலை திட்ட பணி முடிந்ததும், அங்குள்ள ஆற்றில் குளித்துவிட்டு தனியாக ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு கஞ்சா மற்றும் மதுபோதையில் வந்த மர்மநபர்கள், அந்த பெண்ணிடம் சென்று 100 நாள் வேலை தொடர்பாக அதிகாரிகள் உங்களை பார்க்க வேண்டும் என்றும், தங்களுடன் வருமாறும் கூறியதாக தெரிகிறது. அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் அந்த கும்பல் அவர் கையில் வைத்திருந்த துணி, வாளியை அங்கேயே பறித்து போட்டு விட்டு, முள் காட்டுப்பகுதி வழியாக இழுத்து சென்றனர்.
கொடூரக்கொலை
அந்த பகுதியில் வைத்து அந்த பெண்ணின் ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக்கி, அதே ஆடையை கிழித்து அந்த பெண்ணின் கை, கால் மற்றும் வாய் பகுதிகளில் இறுக்கமாக கட்டியுள்ளனர். பின்னர் பெண்ணை கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு, உடலை அங்கேயே வீசி சென்றது தெரியவந்தது. மேலும், அந்த பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவில் தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story