சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!
இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது.
சென்னை,
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.
ஆனால், இந்தியாவின் பெரும்பாலான நகரங்களில் கடந்த 4 மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமின்றி விற்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரின் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர கூடிய அச்சம் ஏற்பட்டு உள்ளது.
எனினும் தொடர்ந்து 132-வது நாளாக சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதேவிலையில் நீடித்து வருகிறது.
அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.101.40-க்கும், டீசல் ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story