சைக்கிளில் சென்று ஆய்வு நடத்திய போலீஸ் சூப்பிரண்டு...!
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சைக்கிளில் சென்று ஆய்வு நடத்தி உள்ளார்.
குள்ளனம்பட்டி,
திண்டுக்கல் மாவட்டத்தின் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் சைக்கிளில் சென்று போலீஸ் நிலையங்களில் ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை திண்டுக்கல் நகர மேற்கு போலீஸ் நிலையத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் திடீர் என்று சைக்கிளில் வந்தார். அப்போது முக்கிய வழக்குகளின் கோப்புகளை சூப்பிரண்டு சீனிவாசன் ஆய்வு செய்தார்.
மேலும் பணியில் இருந்த போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்து, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள என்று அறிவுறுத்தி அங்கிருந்து புறப்பட்டார்.
Related Tags :
Next Story