வாரம் 5 நாள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


வாரம் 5 நாள் வேலை கோரி  வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 7:35 PM IST (Updated: 16 March 2022 7:35 PM IST)
t-max-icont-min-icon

வாரம் 5 நாள் வேலை கோரி வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காரைக்கால்
வங்கிகளின் 11-வது ஊதிய ஒப்பந்தத்தின் படி வாரம் 5 நாள் வேலை, ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி காரைக்காலில் வங்கி தொழிற்சங்கம் சார்பில், காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கி மேலாளர் ராமானுஜம்,  அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். முடிவில் அருண் நன்றி கூறினார்.

Next Story