2 வது நாளாக புதுவை ரொட்டி பால் ஊழியர்கள் போராட்டம்


2 வது நாளாக  புதுவை  ரொட்டி பால் ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 March 2022 9:43 PM IST (Updated: 16 March 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

புதுவை ரொட்டி- பால் ஊழியர்கள் போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது

புதுச்சேரி
புதுவை அரசின் ரொட்டி- பால் திட்டத்தில் 822 பேர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
 இதற்கிடையே புதுவை அரசு துறைகளில் பணிபுரிவோருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார். ஆனால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை தொடர்ந்து அவர்கள் கல்வித்துறை வளாகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவிலும் தொடர்ந்த அவர்களது போராட்டம்  2-வது நாளாக நடந்தது.
போராட்டகளத்துக்கு சென்ற சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, ரொட்டி- பால் ஊழியர்களுக்கு தனது ஆதரவினை தெரிவித்தார். அவர்களது கோரிக்கை தொடர்பாக அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தி.மு.க. எப்போதும் துணை நிற்கும் என்று அவர் கூறினார்.

Next Story