தமிழகத்துக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்து
தமிழகத்துக்கு மின்சாரம் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் என்.எல்.சி. சோலார் எனர்ஜி கார்பரேஷன் மற்றும் பவர் டிரேடிங் கார்பரேஷன் இந்தியா லிமிடெட் ஆகிய நிறுவனங்களுடன் மொத்தம் 2 ஆயிரத்து 900 மெகாவாட் மின்சாரத்தை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் நேற்று ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
என்.எல்.சி (3x800) மெகாவாட் திட்டத்தை ஒடிசா மாநிலம், தலபிரா என்ற இடத்தில் அமைத்திட உள்ளது. அதில் 1500 மெகாவாட் தமிழ்நாட்டிற்கு மத்திய மின்சார அமைச்சகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திட்டம் தொடங்கும் ஆண்டு 2026-2027 என்று திட்டமிடப்படுள்ளது. இந்த திட்டம் நிலக்கரி சுரங்கத்தின் அருகில் இருப்பதால் என்.எல்.சி. சமன் செய்யப்பட்ட மின்சார கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.3.06 என நிர்ணயித்துள்ளது. 2026-2027-ம் ஆண்டு முதல் தமிழகத்தின் மின்சார தேவையை கருத்தில் கொண்டு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு என்.எல்.சி மற்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துடனான ஒப்பந்தம் முதல்அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
1,000 மெகாவாட் சூரிய சக்தி
தமிழ்நாடு மின்சார வாரியம், சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியாவுடன் 1,000 மெகாவாட் சூரிய சக்தியை யூனிட் ஒன்றுக்கு ரூ.2.61 என்ற விலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவில் இருந்து வாங்கப்படும் 1000 மெகாவாட் சூரிய சக்தி மின்சாரம் பயன்பாட்டுக்கு 2022-2023-ம் ஆண்டு இறுதியில் கிடைக்கபெறும்.
வாரியத்தின் பங்கு தொகை
தமிழகத்தின் மின்சார தேவையை கருத்தில் கொண்டு வாரியம், பவர் டிரேடிங் கார்பரேஷன் நிறுவனத்துடன் 4 நடுத்தர கால மின்சார கொள்முதல் ஒப்பந்தங்கள் முதல்-அமைச்சர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மூலம் 24 மணி நேரமும் 400 மெகாவாட் மின்சாரம், யூனிட் ஒன்றிக்கு ரூ.3.26 என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இதன் ஒப்பந்த காலம் 3 ஆண்டுகளாகும்.
என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட், வாரியம் மற்றும் என்.எல்.சி.யின் கூட்டு முயற்சி நிறுவனத்தில் (2x500) மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில், வாரியத்திற்கு 11 சதவீதம் பங்குகள் உள்ளது. 2021-2022-ம் ஆண்டில் முதல் 9 மாதங்களுக்கான ரூ.182.01 கோடி லாபத்தில் வாரியத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.15.16 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சரிடம் மின்சார வாரியத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி வழங்கினார்.
பங்கேற்பு
நிகழ்சியில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, மத்திய நிலக்கரி துறை செயலாளர் டாக்டர் அனில் குமார் ஜெயின், எரிசக்தி துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, வாரியத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ரஜேஷ் லக்கானி, என்.எல்.சி. நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராகேஷ் குமார்.
சோலார் எனர்ஜி கார்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் (வர்த்தகம் மற்றும் வணிகம்) அதுல்ய குமார் நாயக், என்.எல்.சி நிறுவனத்தின் இயக்குநர் (மின்துறை) ஷாஜி ஜான், பி.டி.சி நிறுவனத்தின் செயல் துணைத்தலைவர் பிக்ரம் சிங், வாரிய இயக்குநர்கள் மா.சிவலிங்கராஜன், உ.பா.எழினி, கே.சுந்தரவதனம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story