பங்குனி உத்திர திருவிழா: உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் தேரோட்டம்...!
உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.
தேவகோட்டை,
சிவகங்கை உருவாட்டி பெரியநாயகி அம்மன் கோவில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தேரோட்டம் விழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு இவ்விழா கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த வகையில் 9-ம் திருவிழாவான இன்று காலை திருத்தேர் வடம் பிடித்தல் தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவிற்காக பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று இரவு முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கியிருந்தனர். அப்போது பால்குடம், தீச்சட்டி, காவடி எடுத்து போன்று நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் தேரில் அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்று.
இந்த நிலையில் இன்று காலை 6 மணி அளவில் ஆயிரக்கணக்கான மக்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேர் முன்னாள் காவடிகள், தொட்டில் குழந்தைகள் சுமந்து கொண்டும் பக்தர்கள் சென்றனர். தேர் திருவிழாவின் போது நினைத்த காரியங்கள் வெற்றி அடைய தேர் மீது பக்தர்கள் பூக்களை தூவினர்.
அப்போது மக்கள் வெள்ளத்தில் கோவிலை சுற்றி நான்கு வீதிகளில் உலா வந்து நிலையை சென்றடைந்தத. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதமாக வாழைப்பழங்கள் மற்றும் தேரில் இருந்த பூக்கள் சூறையாக வழங்கப்பட்டது. இவ்விழாவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story