அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் திடீர் ஆய்வு...!


அரசு அலுவலகங்களில்  உதவி கலெக்டர் திடீர் ஆய்வு...!
x
தினத்தந்தி 17 March 2022 10:45 AM IST (Updated: 17 March 2022 10:43 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடத்தினார்.

ஆறுமுகநேரி, 

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள அரசு துறை அலுவலகங்களில் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி இன்று திடீர் ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன்படி காயல்பட்டினம் தென்பாகம் வருவாய் கிராம அலுவலகம், இரத்தினாபுரி அரசு மாணவர் விடுதி, அங்கன்வாடி மையங்கள், ரேஷன் கடைகள் ஆகிய இடங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார்.

மேலும் காயல்பட்டினம் பஸ் நிலைய வளாகத்தில் உள்ள அரசு பொது நூலகத்திற்கு சென்று பதிவேடுகள், நூல்கள் பராமரிக்கப்படும் விதம், நூலகத்தில் அமையப்பெற்றுள்ளது வசதிகள், போட்டித்தேர்வு புத்தக பிரிவு, வாசகா்கள் வருகை விவரம் மற்றும் பணியாளர்கள் குறித்த விவரங்களை கிளை நூலகரான முஜீபுவிடம் கேட்டறிந்தார்.

மழைக்காலங்களில் காயல்பட்டினத்தின் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் பிரச்சனை குறித்தும் உதவி கலெக்டர் புகாரி ஆய்வு மேற்கொண்டார். அப்போது வடிகால் ஓடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அறிந்த அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இந்த ஆய்வு பணிகளின் போது திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர் கண்ணன், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளர் சித்தர் பாபு, காயல்பட்டினம் வி.ஏ.ஓ.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story