வேலூர்: தாலி கட்டிய சில மணி நேரத்தில் மணப்பெண் ஓட்டம்...!
வேலூர் அருகே தாலி கட்டிய சில மணி நேரத்தில் மணப்பெண் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்,
வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் பிளஸ் 2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது .இருவருக்கும் உறவு முறை சரியில்லை என்பதால் பெற்றோர்கள் அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இளம் பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்து பேசி முடித்தனர்.
கடந்த 14-ந் தேதி காலை இளம் பெண்ணுக்கும் நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன் அங்குள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து மணமக்கள் பெண் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். அப்போது யாருக்கும் தெரியாமல் மணப்பெண் தப்பியோடி உள்ளார்.
இதனை அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனார் அவர் கிடைக்கவில்லை என்று தெரிகின்றது.
பின்னர் இது தொடர்பாக அவரது பெற்றோர்கள் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மணப்பெண்ணை தேடி வருகின்றனர்.
தாலி கட்டிய சில மணி நேரத்திற்குள் மணப்பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story