தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
தமிழகத்தில் 17 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை கூடுதல் செயலாளர் பிரபாக உத்தரவிட்டுள்ளார். தென் மண்டல ஐ.ஜி. ஆக இருந்த அன்பு, சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் இருந்த தென் மண்டல ஐ.ஜி. பதவிக்கு ஆஷ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராக இருந்த துரைகுமார், சென்னை பொருளாதார பிரிவு ஐ.ஜி.யாகவும், வடக்கு மண்டல ஐ.ஜி. ஆக இருந்த சந்தோஷ் குமார், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வந்த பிரேம் ஆனந்த் சின்கா, வடக்கு மண்டல ஐ.ஜி. ஆகவும், சென்னை மாநகர காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக பணியாற்றிய செந்தில்குமார், மதுரை மாநகர காவல் ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆயுஷ்மணி திவாரி, மகேஷ்வர் தயால், சுமித் சரண், வனிதா ஆகியோர் ஐ.ஜி. பதவியில் இருந்து ஏ.டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதே போன்று அபின் தினேஷ், சஞ்சய்குமார், செந்தாமரைக்கண்ணன் ஆகியோரும் ஏ.டி.ஜி.பி. ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story