பூட்டிக்கிடந்த தொழிற்சாலையில் திருட்டு
துத்திப்பட்டு பகுதியில் பூட்டிக்கிடந்த தொழிற்சாலையில் திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுவை லாஸ்பேட்டை பாரதி வீதியை சேர்ந்தவர் பிரசன்னா. இவர் துத்திப்பட்டு பகுதியில் வாஷிங் மிஷினில் துணி துவைப்பதற்காக பயன்படுத்தப்படும் சோப்பு லிக்யூட் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தார். கடந்த ஓராண்டாக இந்த தொழிற்சாலை மூடியே கிடந்தது. இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் தொழிற்சாலைக்குள் புகுந்து அலுவலக அறையில் இருந்த கம்ப்யூட்டர், மானிட்டர், 2 மோட்டார்கள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரசன்னா கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிற்சாலையில் புகுந்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story