14 பேருக்கு தொடர் சிகிச்சை
புதுவையில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் 14 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புதுவையில் இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 410 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவருக்கு கூட தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை. தற்போது 14 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்னர். நேற்று ஒருவர் குணமடைந்தார். நேற்று முதல் தவணை தடுப்பூசியை 122 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 774 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 40 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 16 லட்சத்து 8 ஆயிரத்து 864 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story