வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் திடீர் ரத்து
முக்கிய வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை திடீரென ரத்து செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
முக்கிய வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை திடீரென ரத்து செய்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டார்.
வாகன கட்டணம்
புதுவை நகரப்பகுதியில் உள்ள நேரு வீதி, அண்ணாசாலை, கடலூர் சாலை உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ஏப்ரல் 1-ந்தேதி முதல் கட்டணம் வசூலிக்க புதுச்சேரி நகராட்சி முடிவு செய்தது. இதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டு வருகிற 25-ந்தேதி ஏலம் விடுவதாக இருந்தது.
அதாவது குறிப்பிட்ட வீதிகளில் நிறுத்தப்படும் 2 சக்கர வாகனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.10-ம், கார்களுக்கு ரூ.30-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் வசூலிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
ரங்கசாமி உத்தரவு
அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து மனுவும் கொடுத்தார். தேர்தல் பிரிவு செயலாளர் வையாபுரி மணிகண்டன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் ரங்கசாமி இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் டெண்டரை மட்டும் ரத்துசெய்து உத்தரவிட்டார்.
கவர்னருடன் சந்திப்பு
முன்னதாக முதல்-அமைச்சர் ரங்கசாமி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கவர்னர் மாளிகையில் சந்தித்து பேசினார். அப்போது புதுவை சட்டமன்ற கூட்டத்தை கூட்டுவது, வாகன கட்டணம் வசூலிப்பதற்கான டெண்டரை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
Related Tags :
Next Story