தமிழக பட்ஜெட்: தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு


தமிழக பட்ஜெட்:  தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட ரூ.5 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 18 March 2022 11:07 AM IST (Updated: 18 March 2022 11:07 AM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட்டில் தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்  உரை நிகழ்த்தினார்.

பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநிறுத்திடவும், பகுத்தறிவை பரப்பிடவும், பெண் அடிமைத்தனத்தை ஒழித்திடவும் தம் கடைசி மூச்சு இருக்கும் வரை அயராது உழைத்தவர் தந்தை பெரியார்

* தந்தை பெரியாரின் சிந்தனைகள் அடங்கிய தொகுப்பு 27 மொழிகளில் பதிப்பிட  5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு

* தமிழ் மொழியை போற்றி உலகெங்கும் பரவ செய்வதே திமுக அரசின் முதன்மையான குறிக்கோள்; திராவிட மாடலின் இலக்கணமாக முதல் அமைச்சர் திகழ்கிறார்.

* தமிழ் மொழி தொடர்பாக அகரமுதலி திட்டத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு

* நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு அரசின் பங்களிப்பு 10% ஆக உள்ளது.

Next Story