தமிழக பட்ஜெட் : காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க ரூ. 3,384 கோடி ஒதுக்கீடு
காவிரி நீர் வடிநில பகுதிகளை சீரமைக்க 3 ஆயிரத்து 384 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. எதிர்க்கட்சிகள் அமளிக்கு இடையே பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரை நிகழ்த்தினார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* குறுவை சாகுபடிக்காக டெல்டாவைச் சேர்ந்த 10 மாவட்டங்களில் 4,694 கிமீ கால்வாய்களை தூர் வார ஒப்புதல்; வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு
* நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளுக்காக ரூ. 2787 கோடியும், பொது விநியோகத்திட்டத்தை செயல்படுத்த முதற்கட்டமாக ரூ.7,500 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* பாசனத்திற்கான நீரை தங்குதடை இன்றி வழங்கவும், காவிரி பாசன அமைப்புகளை புனரமைத்தல் பணிகளுக்காகவும் ரூ.3,384 கோடி ஒதுகீடு.
* டெல்டா கடைமடை பகுதிகள் வரை தூர்வாரும் பணிகளுக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு
Related Tags :
Next Story