தூத்துக்குடி: எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு...!
தூத்துக்குடி அருகே எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிரிப்பு தெரிவித்துள்ளனர்.
சாயர்புரம்,
தூத்துக்குடி அருகே அல்லிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருவனந்தபுரம் கிராம பொதுமக்கள் அல்லிக்குளம் பகுதியில் சிப்காட் நிறுவனம் சார்பாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அல்லிக்குளம் பஞ்சாயத்து தலைவரிடம் பொதுமக்கள் மனு கொடுத்து உள்ளார்கள்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
அல்லிக்குளம் சுற்றுவட்டார பகுதியில் வேளாண்மை மற்றும் கால்நடை பணிகள் நடந்து வருகின்றது. இதை நம்பி தான் இந்தப் பகுதியில் விவசாயிகள் வாழ்ந்து வருகிறார்கள். தற்போது சிப்காட் நிறுவனம் சார்பாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை இந்தப்பகுதியில் அமைத்தால் வேளாண்மை. கால்நடை கடுமையாக பாதிக்கப்படும். எனவே விவசாயிகள் நலன் கருதி சிப்காட் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story