மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள்


மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி சுற்றுச்சுவரில் வண்ண ஓவியங்கள்
x
தினத்தந்தி 18 March 2022 7:19 PM IST (Updated: 18 March 2022 7:19 PM IST)
t-max-icont-min-icon

மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி சுற்றுச்சுவரில் தலைவர்களின் படங்கள் ,வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன

புதுச்சேரி
புதுச்சேரி பெரியார் நகரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை 80-க்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் படித்து வருகின்றனர். வருகிற கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளி முதல்வர் மகேஸ்வரி புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.
அதாவது பள்ளியின் சுற்றுச்சுவரில் பல்வேறு தலைவர்களின் படங்கள்,  வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. அப்துல் கலாம், பாரதியார், பாரதிதாசன், அன்னை தெரேசா மற்றும் சுற்றுச்சூழல், பள்ளி செல்லும் மாணவர்கள் என பல்வேறு வகையான ஓவியங்கள் சுற்றுச்சுவரை அலங்கரிக்கின்றன. இதற்கான அனைத்து செலவுகளை பள்ளி முதல்வர் மகேஸ்வரி ஏற்றுக்கொண்டார். இந்த ஓவியங்கள் பள்ளி மாணவர்கள், அப்பகுதி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Next Story