லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் வரி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்
லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் வரி செலுத்தாத 4 கடைகளுக்கு ‘சீல்’
திருக்கனூர்
மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு சொந்தமான கடைகள் திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ளது. இங்கு மொத்தமுள்ள 5 கடைகளில் 4 கடைகள் கடந்த 10 ஆண்டுகளாக வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சுமார் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் வரி பாக்கி இருந்ததாம்.அவற்றில் 3 கடைகள் உபயோகப்படுத்தாமல் மூடிய நிலையில் இருந்தது. கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் கடைகளுக்கு உண்டான நிலுவை வரி தொகையை செலுத்துமாறு கடைகாரர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இருப்பினும் சம்பந்தப்பட்ட கடைக்காரர்கள் வரி செலுத்தவில்லை.
இந்தநிலையில் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் தலைமையில் அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் லிங்காரெட்டிபாளையம் சென்று வரி செலுத்தாத 4 கடைகளையும் மூடி ‘சீல்’ வைத்தனர்.
Related Tags :
Next Story