புதுவையில் 10 ம் வகுப்பு மாணவி கடத்தல் போலீசார் விசாரணை


புதுவையில் 10 ம் வகுப்பு மாணவி கடத்தல் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 March 2022 10:05 PM IST (Updated: 18 March 2022 10:05 PM IST)
t-max-icont-min-icon

புதுவையில் 10-ம் வகுப்பு மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி
புதுவை லாஸ்பேட்டை கைலாசாநகரை சேர்ந்தவர் லதா. இவர் துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மகாலட்சுமி என்ற அஞ்சலி (வயது 14). இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.வீட்டில் இருந்து வெளியே சென்ற மகாலட்சுமியை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து லதா லாஸ்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story