பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை


பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை
x
தினத்தந்தி 18 March 2022 10:10 PM IST (Updated: 18 March 2022 10:10 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் ஆலோசனை நடத்தினார்

புதுச்சேரி
மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் அரசுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக கல்வித்துறை அதிகாரிகளுடன் சபாநாயகர் செல்வம்  சட்டசபை கமிட்டி அறையில் ஆலோசனை நடத்தினார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு, இணை இயக்குனர் சிவகாமி, முதன்மை கல்வி அதிகாரி மீனாட்சிசுந்தரம், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் பன்னீர், இளநிலை பொறியாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் மணவெளி தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளின் துணை முதல்வர், தலைமை ஆசிரியர்கள், பொறுப்பு ஆசிரியர்கள் கலந்துகொண்டு அவர்களது பள்ளியில் உள்ள உள்கட்டமைப்பு குறித்த குறைகளை தெரிவித்தனர். அவர்கள் தெரிவித்த குறைகளையும், உள்கட்டமைப்பு வசதிகளையும் உடனடியாக செய்து தர அதிகாரிகளுக்கு சபாநாயகர் செல்வம் உத்தரவிட்டார்.

Next Story