தமிழக வேளாண் பட்ஜெட் - சட்டசபையில் தாக்கல்


தமிழக வேளாண் பட்ஜெட் - சட்டசபையில் தாக்கல்
x
தினத்தந்தி 19 March 2022 10:06 AM IST (Updated: 19 March 2022 10:06 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

2022-23 நிதியாண்டிற்கான ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதமற்ற இந்த வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் வேளாண் துறைக்கென்று தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

இந்த வேளாண் பட்ஜெட்டில் நெல், கரும்பு, பருத்தி, காய்கறி, பழவகைகள் உள்பட அனைத்து வகையான வேளாண் சார்ந்த பொருட்களின் சாகுபடிகளை அதிகரிப்பது, வேளாண் துறையின் மேம்பாடுகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, தமிழக அரசின் பொதுபட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடிக்காக ரூ.2,531 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story