ராணிப்பேட்டை: விலை உயர்ந்த பைக்குகளை பெட்ரோல் ஊற்றி எரிக்கும் சைக்கோ வாலிபர்...!
ஆற்காடு அருகே 3 இருசக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்
ஆற்காடு,
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் தனது இருசக்கர வாகனத்தை கண்ணமங்கலம் கூட்ரோடு அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை இருசக்கர வாகனம் மீது யாரோ மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இது குறித்து பாலசுப்பிரமணியன் கொடுத்த தகவலின் போரில் சம்பவ இடத்துக்கு வந்த ஆற்காடு தீயணைப்பு வீரர்கள் இருசக்கர வாகனத்தின மீது எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் இருசக்கர வாகனம் முழுவதும் எரிந்து சேதம் அடைந்துவிட்டது.
இது குறித்து ஆற்காடு போலீசாரிடம் பாலசுப்பிரமணியள் புகார் கொடுத்து உள்ளார். இது போன்று 2 இருசக்கர வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக போலீசாருக்கு புகார் வந்து இருந்தது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார், இருசக்கர வாகனம் தீ பிடித்து எரிந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அப்போது ஒரு வாலிபர் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை திருடி இருசக்கர வாகனங்கள் மீது ஊற்றி தீவைத்து எரிப்பது தெரியவந்தது. பின்னர் அந்த நபரை தீவிரமாக தேடிவந்த போலீசார் இன்று கைது செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
இருசக்கர வாகனங்களுக்கு தீ வைத்த ஆற்காடு கஷ்பாவை சேர்ந்த கார்த்திக் ரோகித் (வயது 23) என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கார்திக் ரோகித் விலை உயர்ந்த புதிய இருசக்கர வாகனங்களை கண்டாலே எரிக்க வேண்டுமென்று தோன்றுகிறது என்று கூறியதை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், மது குடித்து ஜாலியாக ஊர் சுற்றுவதற்காக பெட்ரோலை திருடி உள்ளார். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story