ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவர் மருத்துவர் சுப்பையா கைது
சென்னை, ஆதம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கார் நிறுத்த தகராறில் அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கில் மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்சனையால் மூதாட்டின் வீட்டு வாசலில் அநாகரிமாக நடந்து கொண்டதாக பிரபல புற்றுநோய் நிபுணரும் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவருமான மருத்துவர் சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், ஆதம்பாக்கம் போலீசாரால் மருத்துவர் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதலமைச்சர் வீடு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story