சென்னை மெட்ரோ ரெயிலில் அதிகமாக பயணித்தால் பரிசு..!
மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது
சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு மெட்ரோ ரெயில்கள் மற்றும் மின்சார ரெயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை, மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ரூ 1 லட்சம் மதிப்பிலான பரிசு கூப்பன் வழங்க மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது
ஒரு மாதத்தில் அதிகமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ 2,000 மதிப்புள்ள பரிசு கூப்பன் வழங்கவும் மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது
மாதம் ரூ 1,500க்கு மேல் பரிவர்த்தனை செய்த 10 பயனாளிகளுக்கு ரூ 2,000 மதிப்பிலான பரிசு கூப்பன் மற்றும் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளுக்கு குலுக்கல் முறையில் பரிசுகள் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது
Related Tags :
Next Story