புயல் அபாயம் எதிரொலி அந்தமானில் சுற்றுலா தலங்கள் 22-ந் தேதி வரை மூடல் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்


புயல் அபாயம் எதிரொலி அந்தமானில் சுற்றுலா தலங்கள் 22-ந் தேதி வரை மூடல் பயணத்தை தவிர்க்க அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 20 March 2022 2:32 AM IST (Updated: 20 March 2022 2:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் இருந்து அந்தமான்-நிகோபாா் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது.

ஆலந்தூர், 

தமிழ்நாட்டில் இருந்து அந்தமான்-நிகோபாா் தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு விமானங்களில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து வருகிறார்கள். இதில் சுற்றுலா பயணிகளாக செல்பவா்கள்தான் அதிகம்.

இந்த நிலையில் அந்தமான்-நிகோபார் தீவுக்கு அருகே வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. அது புயலாக உருவாகி அந்தமான்-நிகோபாா் பகுதிகளை தாக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் நேற்று முதல் வருகிற 22-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) வரை மூடப்பட்டுள்ளன. எனவே அந்தமான்-நிகோபாா் தீவுக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையடுத்து சென்னையில் இருந்து அந்தமானுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அங்கு சென்று அவதிப்படக்கூடாது என்பதற்காக புயல் எச்சரிக்கையால் அந்தமானில் சுற்றுலா தலங்கள் 22-ந் தேதி வரை மூடப்பட்டு இருப்பது பற்றி சென்னை விமான நிலையத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதோடு சுற்றுலாவுக்காக அந்தமான் செல்லும் பயணிகள் தங்களுடைய பயணத்தை வரும் 22-ந் தேதி வரை தவிர்ப்பது நல்லது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Next Story