மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காணாமல் போன சிலை - கண்டுபிடிக்க புதிய திட்டம்
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் காணாமல் போன மயில் சிலையை அதிநவீன கருவிகளைக் கொண்டு கண்டுபிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள புன்னை வனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை கடந்த 2004 ஆம் ஆண்டு காணாமல் போனது. கோவிலின் தெப்பக்குளத்தில் சிலை வீசப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கடந்த வாரம் தீயணைப்புத்துறையினர் ஆழ்கடல் நீச்சல் பயிற்சி வீரர்கள் மூலம் சிலையை தேடினர்.
இதனை தொடர்ந்து அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் மூலம் குளத்தின் அடியில் சென்று சிலையை தேடி சிலை கடத்தல் தடுப்பி பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை பள்ளிக்கரணையில் அமைந்துள்ள தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடிதம் எழுதியுள்ளனர்.
கடல் வளம், கடல் வாழ் உயிரினங்கள் குறித்து ஆய்வு செய்யும் வகையில் அதிநவீன தொழில்நுட்ப கருவிகளைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், டார்னியர் விமானம் கடலில் விழுந்த போது அதனை தேடும் பணியில் முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story