விருதுநகர்: நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் மோதி குழந்தை பலி...!


விருதுநகர்: நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் மோதி குழந்தை பலி...!
x
தினத்தந்தி 20 March 2022 5:34 PM IST (Updated: 21 March 2022 2:13 PM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பையில் 18 மாத குழந்தை மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர்,

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் (30). இவர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான பெரியகுளம் கண்மாய் கரை அருகே உள்ள கரும்பு தோட்டம் ஒன்றில் தனது குடும்பத்துடன் ஒரு மாதமாக தங்கி பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் முத்துராஜின் பதினெட்டு மாதமே ஆன மகன் நிஷாந்த், கரும்பு தோட்டத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் கலப்பை மீது தானாக ஓடிவந்து மோதி விடுகிறார். இதில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது

இதனை தொடர்ந்து 18 மாதம் ஆன குழந்தை நிஷாந்த் சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிப்புத்தூர் அரசு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இறந்த குழந்தை பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மம்சாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 18 மாதமே ஆன குழந்தை பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story