குடும்ப தகராறில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி கைது


குடும்ப தகராறில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவி கைது
x
தினத்தந்தி 20 March 2022 6:38 PM IST (Updated: 21 March 2022 12:49 PM IST)
t-max-icont-min-icon

மதுரையில் குடும்ப தகராறில் கணவரை அரிவாளால் வெட்டி கொன்ற மனைவியை போலிசார் கைது செய்தனர்.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த தம்பதியர் பொன்னையன்(38) - அழகம்மாள்(27). விவசாய கூழி தொழிலாளர்களான இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இவர்களிடையே அடிக்கடி வாக்குவாதமும் சண்டைகளும் நடந்துவந்துள்ளன. 

இந்நிலையில் இன்று அழகம்மாளை அவரது கணவர் பொன்னையன் அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அழகம்மாள் வீட்டில் இருந்த அரிவாளினால் அவரது கணவர் பொன்னையனை சராமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. 

படுகாயமடைந்த பொன்னையன் மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும் வழியில் இறந்துபோனார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் அழகம்மாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி கணவனை கொன்ற சம்பவம் மேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story