சீர்காழி: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - போலீஸ் வலைவீச்சு


சீர்காழி: சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் - போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 March 2022 8:13 PM IST (Updated: 20 March 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை ஆபாச வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை, 

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக அர்ஜூனன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் கொள்ளிடம் அருகே தைக்கால் மதகடி தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிமாறன் (வயது 31) என்பவர் நேற்று செங்கமேடு அருகில் மோட்டார் சைக்கிளில் வரும் பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தன்னை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக சீர்காழி காவல் நிலையத்தில் புகார் செய்தார். 

புகாரின் அடிப்படையில் சீர்காழி போலீசார் விசாரணைக்காக கொள்ளிடம் தைக்கால் பைக்கால் மதகடி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் என்கின்ற செந்தில் என்பவரை செல்போனில் அழைத்துள்ளனர். அப்போது தொலைபேசியில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை ஆபாசமாக பேசிய செந்தில் கடுமையாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். 

மேலும் தன்னை இனிமேல் விசாரித்தால் அரை மணி நேரத்தில் குடும்பத்தோடு காலி செய்து விடுவேன் என கடுமையாக பேசி மிரட்டி உள்ளார். இதனையடுத்து செந்தில் மீது சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில் சீர்காழி போலீஸ் துணை சூப்பிரண்டு உத்தரவின் பேரில்  ரவுடி செந்தில் மீது காமக் குரோதமாக ஆபாச வார்த்தையில் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான செந்திலை தேடி வருகின்றனர். 

இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விசாரணைக்கு செல்போனில் அழைத்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுனனை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.



Next Story