புதுவை கோவில்களில் ராகு கேது பெயர்ச்சி வழிபாடு, பரிகார பூஜைகள்
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை புதுவை கோவில்களில் பரிகார பூஜைகள் நடக்கின்றன.
ராகு-கேது பெயர்ச்சியை முன்னிட்டு நாளை புதுவை கோவில்களில் பரிகார பூஜைகள் நடக்கின்றன.
ராகு-கேது பெயர்ச்சி
உலகை காக்கும் பரம்பொருளான நவக்கிரகங்களின் செயல்பாட்டின் அடிப்படையில் தான் ஒவ்வொரு நாளும் இயங்குகின்றன. இதில் ராகு-கேது, குரு, சனி ஆகிய கிரகங்கள் மட்டுமே அடிக்கடி இடப்பெயரும் தன்மை கொண்டவை ஆகும். ராகு-கேது நீங்கலாக மற்ற கிரகங்கள் அனைத்தும் முன்னோக்கி செல்லும் தன்மை உடையவை நாளை (திங்கட்கிழமை) பிற்பகல் 3.15 மணி அளவில் ராகு பகவான் ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும், கேது பகவான் விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
பரிகார பூஜைகள்
இதனை முன்னிட்டு புதுவையில் உள்ள வேதபுரீஸ்வரர், சித்தானந்தர், வில்லியனூர் திருக்காமீசுவரர், பாகூர் மூலநாதர், திருவண்டார் கோவில் பஞ்சநாதீஸ்வரர், மொரட்டாண்டி உள்பட அனைத்து கோவில்களிலும் நவகிரகங்களுக்கு மகா யாகமும், தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்கார, ஆராதனைகளும் நடைபெறவுள்ளன. மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம் ஆகிய ராசிகளுக்கு பரிகார பூஜை நடைபெறுகிறது.
அபயராகு-அனுக்கிரக கேது
புதுவை இடையார்பாளையம் நாணமேடு சப்தகிரி நகரில் உள்ள ஆதி சொர்ணபைரவர் கோவிலில் ஒரே கல்லில் உருவான அபயராகு-அனுக்கிரக கேது சன்னதியில் பரிகார சாந்தி, துர்கா கணபதி ஹோம வழிபாடு காலை 10 மனிக்கு தொடங்குகிறது. தொடர்ந்து விசேஷ அபிஷேக, அலங்காரத்துடன் வழிபாடு நடக்கிறது.
அரசு அறிவுறுத்தலின்படி கோவில்களில் பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடை பிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story