வியாபாரி வீட்டில் நகை பணம் திருட்டு


வியாபாரி வீட்டில் நகை பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 March 2022 11:08 PM IST (Updated: 20 March 2022 11:08 PM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கண்டமங்கலம் அருகே பூஞ்சோலைகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் (வயது 49). புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைத்தார் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று ராஜன் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கொல்லிமலைக்கு சென்று விட்டார். அன்று நள்ளிரவில் வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டுக்குள் இருந்து 2 மர்மநபர்கள் ஓடினர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜன் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.95 ஆயிரம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில்  கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story